தல அஜீத்தின் ஒரே பாடல் - டுவிட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்- 20 மில்லியன் பார்வையாளரை கடந்து மாபெரும் சாதனை
அஜீத் நடித்து வெளிவர இருக்கும் ‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாதிரி பாடல்’ யூ-டியூப்பில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
தல அஜீத் திரையுலகிற்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. விக்னேஷ் சிவன் வரிகளில், யுவனின் இசையில் வெளியான இந்த பாடல் தான் படத்தில் அஜித்திற்கான இன்ட்ரோ சாங்க் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், “படம் தொடங்கும் காலக்கட்டத்திலேயே அஜீத் சாருக்கு மாஸான இன்ட்ரோ பாடல் வேண்டும் என்று வினோத் கூறினார். ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் விதத்தில் பாடல் வர வேண்டுமென்று நானும் ஆசைப்பட்டேன்.
அப்படியே இந்தப் பாடலும் உருவானது” என்றார். பாடல் வெளியான சில விநாடிகளில் இருந்தே பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது. தற்போது ‘நாங்க வேற மாதிரி’ பாடல் யூ-டியூப்பில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
இதனையடுத்து #VeraMaari, #NaangaVeraMaari, #Valimai ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் தல ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.
