ரோட்டு கடையில் மீன் வறுத்துக்கொடுத்த அம்மாவை கட்டியணைத்த நடிகர் அருண்விஜய் - வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அருண்விஜய். ஹீரோவாகவும், வில்லனாகவும் அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டு வருகின்றார். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் அவருக் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது காயம் சரியானதால் மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கிய அருண்விஜய், படப்பிடிப்பு தளத்தின் அருகே இருந்த ரோட்டு கடை ஒன்றுக்கு உணவருந்த சென்றார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடையில் மீன் வறுத்துக்கொண்டிருந்த அம்மாவை கட்டியணைத்தவாறு, அருண்விஜய் மீன் பொறிக்கும் புகைப்படத்தினையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.