சைடு பிசினஸ் தொடங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் - வீடியோ வைரல்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவன ஈர்ப்பை பெற்றார்.
தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கி உள்ளார்.
இது குறித்து வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் கடந்த 4 மாதங்களாக தனது டீம்முடன் இயற்கையான அழகு சாதன பொருட்களை உருவாக்க உழைத்து வருவதாகவும், ரோஸ், சந்தனம், ஏலக்காய், குங்குமப்பூ போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்துள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
‘பூமித்ரா’ அழகு சாதன பொருட்கள் அனைத்துமே கெமிக்கல் மற்றும் தேவையில்லாத வேஸ்ட் இல்லாத, சுத்தமான ஆர்கானிக் பொருட்கள் என்பதையும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.