ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி பயந்துபோன நயன்தாரா : அவசர அவசரமாக கிளம்பிய வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படுபவர்கதான் நடிகை நயன்தாரா.
இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். தற்போது நயன்தாரா அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவரின் காதலரான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வெளிவந்துள்ள படம் நெற்றிக்கண். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்து பெரிய பெயர் பெற்றிருக்கிறார்.
மறுபடியும், காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல 2 காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படதின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது.
அப்போது ரசிகர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு ஒரு பெரிய கும்பலே சுற்றி வளைத்ததால் அதில் நடிகை நயன்தாரா சிக்கித் திணறினார்.
அப்போது பயந்து போன அவரை பாதுகாப்பாளர்கள் அவசர, அவசரமாக காரில் பாத்திரமாக ஏற்றி அனுப்பினர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.