மெல்போர்ன் விருது விழாவில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு! குவியும் வாழ்த்துக்கள்

cinema-viral-news
By Nandhini Aug 20, 2021 12:19 PM GMT
Report

தி பேமிலி மேன் வெப் சீரிஸுக்காக சமந்தா சிறந்த நடிகைக்கான விருது வென்றிருக்கிறார். இந்தியாவின் அதிக வரவேரற்பு பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்று தி பேமிலி மேன். இந்த சீரிஸின் 2ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது தி பேமிலி மேன் சீரிஸ் 2ம் பாகம். இதுதவிர, மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த வெப் சீரிஸை ராஜ் மற்றும் டிகே இருவர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். இந்த சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா இணைந்திருக்கிறார். இந்த சீரிஸில் சமந்தா வெறித்தனமாக நடித்துள்ளார். சமந்தா ராஜி என்ற கதாபாத்திரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த சீரிஸ் விடுதலைப் புலிகள் அமைப்பையும் இலங்கைத் தமிழர்களையும் தவறாகச் சித்தரித்ததாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால் மற்ற மொழிகளில் ரசிகர்கள் இந்த சீரிஸைக் கொண்டாடினார்கள்.

மேலும் இந்த சீரிஸின் மூன்றாம் பாகமும் உருவாகி உள்ளது. இந்நிலையில், தற்போது சூர்யா சிறந்த நடிகருக்கான விருது பெற்றிருக்கிறார்.

ஆம், மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சமந்தா நடிகையாக வெப் சீரிஸ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து, சமந்தாவுக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.