பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத சென்ராயன் மனைவி! எதற்கு தெரியுமா?

cinema-viral-news
By Nandhini Aug 20, 2021 06:25 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை முடித்துள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் 5-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இரண்டாவது சீசனில் தமிழ் மக்கள் ரசிக்கும் வண்ணம் ஒரு சந்தோஷ நிகழ்வு நடந்தது.

அது என்னவென்றால் திருமணம் ஆகியும் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சென்ராயனுக்கு அவரது மனைவி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சந்தோஷ செய்தியை சொல்லி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அதைக்கேட்டதும் சென்ராயன் ‘நான் அப்பா ஆகிட்டேன்’ என சந்தோஷத்தில் துள்ளி குதித்து பரவசப்பட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். இதைப் பார்த்த மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இந்த விஷயம் அந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வைரலானது.

தற்போது, விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வயிற்றில் இருக்கும் போதே பிரபலம் ஆன அந்த குழந்தையை பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளார் சென்ராயன். அவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் மனைவியை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.

இதோ அந்த அழகிய வீடியோ,