பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி... நேரில் வாழ்த்து சொன்ன 80-ஸ் நட்சத்திரங்கள்! வைரல் புகைப்படங்கள்

cinema-viral-news
By Nandhini Aug 19, 2021 05:09 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை சுஹாசினி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்தார். நடிப்பு மட்டும் அல்லாமல், இயக்கம், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகை சுஹாசினி.

இவர் பிரபல இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது 60-வது பிறந்தநாளை கடந்த 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், 80 மற்றும் 90-களில் நடித்த முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, மோகன், ஷோபனா, அம்பிகா, பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைக்கூறி சிறப்பித்திருக்கிறார்கள்.

இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது நடிகை சுஹாசினி நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள் - 

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி... நேரில் வாழ்த்து சொன்ன 80-ஸ் நட்சத்திரங்கள்! வைரல் புகைப்படங்கள் | Cinema Viral News