விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை செய்த 18 கார்களை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தேர்தலுக்காக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தாட்டி மானபல்லி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏழுமலை என்பவரும் வீரி செட்டிபல்லி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜ்குமார் என்பவரும் போட்டிகிறார்கள்.
ஏழுமலை, ராஜ்குமார்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய நேற்று காலை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் குடியாத்தம் - சித்தூர் சாலையில் நேற்று ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட கார்களில் வாக்கு சேகரிக்க சென்றுக் கொண்டிருந்தார்கள்.
இது குறித்து அறிந்ததும், குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று தாட்டி மானபல்லி கிராமம் அருகே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்ற காரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார்கள்.
அப்போது உரிய அனுமதி இல்லாமல் செல்வதாக கூறி 18 கார்களை தேர்தல் அதிகாரி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
சுமார் 2 மணி நேரத்திற்குப்பின்பு பிரச்சாரத்துக்கு அந்த கார்களின் விபரங்களை சேகரித்து கொண்டு அனுப்பி வைத்தார்கள். கார்களில் உரிய அனுமதியின்றி பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து பரதராமி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.