ஆஸ்கார் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட 'கூழாங்கல்' - வருத்தத்தில் விக்னேஷ் சிவன்
ஆஸ்கார் விருது போட்டியிலிருந்து 'கூழாங்கல்' திரைப்படம் வெளியேற்றப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள படம் 'கூழாங்கல்'.
இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு படக்குழு அனுப்பியது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து சமீபத்தில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கும் 'கூழாங்கல்' படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
'கூழாங்கல்' திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று விக்னேஷ் சிவன் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் ஆஸ்கார் விருது போட்டியிலிருந்து 'கூழாங்கல்' திரைப்படம் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், ''ஆஸ்கார் பட்டியலில் நம் படம் வந்திருக்கிறதா என்று பார்ப்பதே பெரிய சாதனை.
இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருந்தால் எங்களைப் போன்ற சினிமா தயாரிப்பாளர்களுக்கு, நாம் கொண்டு வந்திருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.