வீர தீர சூரன் படத்தை வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு- என்ன காரணம்?

Vikram Tamil Cinema Actors Supreme Court of India
By Vidhya Senthil Mar 27, 2025 04:24 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீர தீர சூரன் படத்தை வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு- என்ன காரணம்? | Cinema Veera Theera Sooran Movie Release Ban

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவானப்படம் தான் வீர தீர சூரன். இதில் கதாநாயகனாக விக்ரம் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கல்லூரி பாடலும், டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்தப் படம் நாளை (27ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாக இருந்தது.இந்நிலையில், வீர தீர சூரன் படத்தை வெளியிட தடைகோரி Ivy entertainment என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

வீர தீர சூரன் படத்தை வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு- என்ன காரணம்? | Cinema Veera Theera Sooran Movie Release Ban

படத்திற்கு நிதியுதவி வழங்கி, பெருவாரியான உரிமையைப் பெற்றுள்ள தங்களிடம் உரிய எழுத்துப்பூர்வ உத்தரவுகள் பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி உள்ளது.

வீர தீர சூரன் படத்தை வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு- என்ன காரணம்? | Cinema Veera Theera Sooran Movie Release Ban

இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி, படத்தின் மீதான தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.