பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் - வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் வைரல்
பிரபல சீரியல் நடிகை வைஷாலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில், தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை வைஷாலி. இவர் சென்னையைச் சேர்ந்தவர். மாலை நேரம் என்ற குறும்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற சீரியலான ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். பின்னர் ‘மாப்பிள்ளை’, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கோகுலத்தில் சீதை’ தொடரில் நடித்து வருகிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார்.
முதலில் விஷாலின் ‘கதக்களி’ படத்தில் அறிமுகமானார். பின்னர், சர்க்கார், ரெமோ, சீமராஜா, யங் மங் சங் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருக்கிறார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை வைஷாலிக்கும், தனது நீண்ட காதலருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனையடுத்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தனது திருமணத்திற்காக ஷாப்பிங் செய்ய தனது காதலர் சத்யாவுடன், வைஷாலிக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைஷாலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.