உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணையும் நடிகர் வடிவேலு - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

cinema actor-vadivelu udayanidhi-stalin
By Nandhini Dec 01, 2021 07:24 AM GMT
Report

இயக்குநர் மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய படத்தில் நடிகர் வடிவேலு இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப் படம் ஆகிய 2 படங்களை இயக்குகிறார். முதலில் இப்படங்களைத்தான் இயக்குவதாக இருந்தார்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாய் மாற இருப்பதாலும், அவர் நடிக்கும் கடைசிப் படம் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மாரி செல்வராஜ் உதயநிதி படம் முதலில் துவங்க உள்ளது. ஏற்கெனவே, இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுடன், நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். வடிவேலு தற்போது ஹீரோவாக ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். 

உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணையும் நடிகர் வடிவேலு - ரசிகர்கள் எதிர்பார்ப்பு | Cinema Udayanidhi Stalin Actor Vadivelu