திருமணத்திற்குப்பிறகு முன்னாள் காதலுடன் ‘டைகர் 3’ படப்பிடிப்பில் இணையும் கத்ரீனா கைஃப்
திருமணத்திற்குப் பிறகு முன்னாள் காதலரான சல்மான்கானுடன் ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடிகை கத்ரீனா கைஃப் கலந்து கொள்ள இருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த பாலிவுட்டின் கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் ஜோடி கடந்த டிசம்பர் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். இவர்கள் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவர்களது திருமணத்தில் உறவினர்கள், பாலிவுட் நடிகர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சமீபத்தில் இருவர் இருவரும் தேனிலவை முடித்துக் கொண்டு மும்பை விமான நிலையம் வந்தடைந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ள நடிகை கத்ரீனா கைஃப். சல்மான்கானின் ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.
15 நாட்கள் நடைபெறும் இப்படப்பிடிப்பில் ஹீரோயினாக நடித்துள்ள கத்ரீனா கைஃப்-சல்மான் கான் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
இப்படத்தை, மனீஷ் ஷர்மா இயக்கி இருக்கிறார். ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘டைகர் 3’ படப்பிடிப்பு ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது டெல்லியில் நடைபெறுகிறது. கத்ரீனா கைஃப் நடிப்பில் கடைசியாக ‘சூர்யன்வன்ஷி’ படமும், விக்கி கெளஷல் நடிப்பில் ‘சர்தார் உத்தம்’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.