நடிகை தமன்னா மீது வழக்கு தொடர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் - காரணம் இதுதானாம்

cinema-thamanna
By Nandhini Oct 28, 2021 08:01 AM GMT
Report

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்தார்.ஆனால் அதிலிருந்து அவரை நீக்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சியான தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம்.

ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம். ஆனால், வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார். விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அந்த மனுவியில் குறிப்பிட்டுள்ளனர். 

நடிகை தமன்னா மீது வழக்கு தொடர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் - காரணம் இதுதானாம் | Cinema Thamanna