மறைந்த சுஷாந்த் முன்னாள் காதலி அங்கிதா - விக்கி ஜெயின் ஜோடிக்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து

cinema-sushant-ankitha
By Nandhini Dec 07, 2021 11:48 AM GMT
Report

பாலிவுட்டிலிருந்து தொலைக்காட்சியில் நுழைந்த பிரபல நடிகை அங்கிதா லோகண்டே. இவரும், கிரிக்கெட் ‘தல எம்.எஸ் தோனி’யின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து, தனது அசத்திய திறமையை வெளிப்படுத்தியிருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புரிந்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த வருடம் ஊரடங்கின் போது சுஷாந்த் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அங்கிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிதா தனது புதிய காதலரான விக்கி ஜெயின் என்பவருடன் தனது புதிய காதலருடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில், இருவரும் வரும் 14-ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று மும்பையில் நடைபெறும் pre-wedding செலிப்ரேஷனை இருவரும் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த சுஷாந்த் முன்னாள் காதலி அங்கிதா - விக்கி ஜெயின் ஜோடிக்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து | Cinema Sushant Ankitha