இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு - சூரிக்கு பதில் கூறிய சூர்யா

cinema-surya-suri
By Nandhini Nov 18, 2021 04:42 AM GMT
Report

‘ஜெய் பீம்’ படத்தை பார்த்து பாராட்டிய சூரிக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய்பீம்.

இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், ஒரு தரப்பினரின் எதிர்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது நடிகர் சூர்யா மீது குறிப்பிட்ட நபர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். திரைத்துறை பிரபலங்கள் பலர் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாக குரல் எழுப்ப துவங்கி இருக்கிறார்கள்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சூரி, 'ஜெய் பீம்' படத்தை இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியவில்லை.

அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன். ‘ஜெய்பீம்’ படமல்ல, பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை” என்று பாராட்டி இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா, சூரிக்கு பதிலளித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு” என்று பதிவிட்டுள்ளார்.