நடிகர் சூர்யாவுக்கு எதிராக அணி திரளும் அமைப்புகள் - போராட்டம் நடத்த திட்டம்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான படம் ‘ஜெய் பீம்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது.
வன்னியர் சமுதாயத்தை அப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக அச்சமுதாய அமைப்புகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன. அப்படம் தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு, 9 கேள்விகளை முன்வைத்து, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.
'கொலை செய்த போலீஸ் அதிகாரி அந்தோணிசாமி பெயரை ஏன் சினிமாவில் வைக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தார். சூர்யாவும், அன்புமணிக்கு எழுதிய பதில் கடிதத்தில், 'பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்' என்று அன்புமணியிடம் கேட்டுக்கொண்டார்.
இவர்கள் இருவரின் அறிக்கை மோதல் தீவிரமடைந்துள்ளன. 'இருவரிடம் சமரச பேச்சு நடத்த முன் வரவேண்டும்' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், வன்னியர் சமுதாயத்தில் பிரிந்து கிடந்த அனைத்து அமைப்புகளும், அன்புமணிக்கு ஆதரவு அளித்திருக்கிறது. அந்த அமைப்புகள் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக திட்டமிட்டுள்ளன.