கட்டி அணைத்து முத்தமிட்ட சுகேஷ் சந்திரசேகர் - வெளியான புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை
சுகேஷ் சந்திரசேகர் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்ஸை, பின்னாலிருந்து கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுப்பதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்? ரூ.200 கோடி மோசடி, இரட்டை இலை சின்னத்தை மீட்க இடைத்தரகராக செயல்பட்டு, பல மோசடிகளை செய்தவர்தான் இந்த சந்திரசேகர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, இரட்டை இலை சின்னத்துக்காக அதிமுகவினரும், டிடிவி தினகரனும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டு சின்னத்தை மீட்க, டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
2017ம் ஆண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைதான சந்திரசேகர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது, 21க்கும் அதிகமான மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
சிறையில் இருந்தபடியே, பிரபல தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டார். சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க உதவுவதாக கூறி, பணம் பெற்றதாக அதிதியே புகார் அளித்தார்.
இதனையடுத்து சுகேஷுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். அதில் 20 சொகுசு கார்கள், லேப்டாப், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சிறையில் இருந்து கொண்டு, அவரது மனைவியும், நடிகையுமான லீனா மரியா மூலம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார். இந்த மோசடி வழக்கில் ஜாக்குலினிடம் அமலாக்கத்துறையினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஜாக்குலினும் ஏமாற்றப்பட்டாரா? என கேள்வியெழுப்பப்பட்டது.
தற்போது இடைக்கால ஜாமீனில் வெளிவந்திருக்கும் சுகேஷ், நடிகை ஜாக்குலின் உடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதோடு, செல்ஃபியில் தெரியும் ஐஃபோன், அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டு, விசாரணைக்கு உட்டபடுத்தப்பட்டது. இந்த வழக்கில், சமீபத்தில் சுகேஷுடன் காதல் கிசு கிசுக்கள் வந்தபோது, அதனை ஜாக்குலின் திட்டவட்டமாக மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.