பரீட்சையில் சினிமா பாடல்!... அசிங்கப்படுத்திய ஆசிரியரால் தூக்கில் தொங்கிய கார்த்திக்

cinema song dead exam
By Jon Mar 08, 2021 06:35 PM GMT
Report

தமிழகத்தில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார், இவரது மகன் கார்த்திக் (வயது 17), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தாவரவியல் ஆசிரியர் தேர்வு வைத்த போது, தெரியாத கேள்விகளுக்கு கார்த்திக் சினிமா பட பாடல்களை பதிலாக எழுதியுள்ளார். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை திருத்தும் போது இதை கவனித்த ஆசிரியர், மற்ற மாணவர்கள் முன்பு படித்து காட்டியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த, வேதியியல் ஆசிரியிடமும் இதை கூற, அனைவரிடம் இதைச்சொல்லப் போவதாக இருவரும் பேசியுள்ளனர்.

உடனே இதுபோன்று இனி தவறு செய்ய மாட்டேன் என கார்த்திக் மன்னிப்பு கேட்டும், பள்ளியை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அத்துடன் திரும்பி வந்தால் பெற்றோரை அழைத்துவர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர், இதனால் அழுது கொண்டே வீட்டுக்கு வந்த கார்த்திக், உறவினர்களிடம் இதைப்பற்றி கூறியுள்ளார்.

அவர்களோ, கார்த்திக்கை சமாதானம் செய்துவிட்டு, தந்தை வந்தால் பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளனர். இருப்பினும் அதிக மன உளைச்சலுக்கு ஆனான கார்த்திக் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான், இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.