‘எனக்கு தோல் வியாதி...’ - பிரபல நடிகை தைரியமாக அறிவிப்பு
cinema-skin-problem
By Nandhini
நடிகை யாமி கவுதம் தனக்கு நீண்ட நாட்களாக தோல் வியாதி இருப்பதாகத் அறிவித்துள்ளார். பிரபல முகப்பொலிவு க்ரீம் விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார் யாமி கவுதம்.
இவருக்கு தற்போது பாலிவுட் நடிகையாக மாறி இருக்கிறார். அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், யாமி கவிதம் தனக்கு பல வருடங்களாக Keratosis Floris என்ற தோல் வியாதி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தனது பதின் பருவத்தில் இருந்தே இந்தத் தோல் வியாதி இருந்து வருவதாகவும் அதை குணப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். இத்தனை நாட்களாக இதை மறைத்து வைத்து வந்தேன். இன்று தைரியமாக அதை தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.