Monday, May 19, 2025

"வெற்றி வந்தவுடன் தலைக்கனம் வரக்கூடாது... " - மேடையில் சிம்புவிற்கு கண்டனம் தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

cinema simbu manatu s-a--chandrasekhar
By Nandhini 3 years ago
Report

பல வருடங்களாக மார்க்கெட் இழந்த சிம்புவிற்கு ‘மாநாடு’ படம் மூலம் இழந்த மார்க்கெட்டை மீட்டெடுத்துள்ளார். இதனையடுத்து, நடிகர் சிம்பு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மிகப் பெரிய நடிகராக வலம் வருவார் என்று ரசிர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் 100 கோடி வசூல் என்ற லிஸ்டில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், படக் குழுவினருடன் சேர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த விழாவுக்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். ஆனால், சிம்பு மட்டும் கலந்து கொள்ளவில்லை.

சிம்பு இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு வராததை மேடையிலேயே விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கண்டித்துள்ளார். வெற்றி பெற்றவுடன் தலைக்கனம் வரக்கூடாது. சூட்டிங்கில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் ஒவ்வொரு படத்தின் வெற்றியின் போதும் இருக்க வேண்டும்.

இதைத்தான் நான் என்னுடைய மகன் விஜய்க்கும் சொல்லிக் கொடுத்து உள்ளேன் என்று மேடையில் பேசினார். படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர்க்கும் இடையில் சேட்டிலைட் விற்பனையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் தந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தயாரிப்பாளர்களை மதிக்காமல் சிம்பு நடந்து கொள்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக பேசப்படுகிறது.