மாநாடு - ஹூட்டிங் தளத்தில் சிம்பு நடித்த பிரத்யேக காட்சி - வைரலாக்கும் ரசிகர்கள்

cinema-simbu-acting
By Nandhini Dec 18, 2021 06:41 AM GMT
Report

‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவின் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. இப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கோடிக்கணக்கில் வசூல் சாதனையை படைத்துள்ளது. இப்படத்தில் சிம்புவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிம்புக்கு கம்பேக் படமாக இப்படம் மாறியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, இப்படம் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக சோனி லைவ் ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது. இந்நிலியல், இப்படத்தில் சிம்புவின் சில காட்சிகள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவையாக மாறி உள்ளது.

இதேபோன்று எஸ்.ஜே.சூர்யாவின் தலைவரே சொல்லும் வசனங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவையாக மாறியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பு பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.