'ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்' - மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர்
'ரொம்ப பிரச்சினை தறாங்க... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்' என்று மாநாடு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர்மல்க பேசினார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாநாடு'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும், கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ். ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உருவாகி இருக்கிறது.
இப்படம் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் இன்று இடப்பத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது, கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் சூழ இந்த வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில், மேடையில் பேசிய நடிகர் சிம்பு, ''ரொம்ப பிரச்சினை கொடுக்கறாங்க... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்.
என் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று கண்ணீர்மல்க பேசினார். சில நிமிடம் அவர் மேடையிலேயே பேச முடியாமல் நின்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.