சிறையில் இருக்கும் மகனை சந்தித்த ஷாருக்கான் - வீடியோ வைரல்

cinema-sharukkan-son-meeting-
By Nandhini Oct 21, 2021 05:24 AM GMT
Report

மும்பை மத்திய சிறையிலிருக்கும் தனது மகனைக் காண நடிகர் ஷாருக்கான் சிறைக்கு சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்யன் கான் கைதுக்கு பிறகு தற்போதுதான் முதல்முறையாக ஷாருக்கான் பொதுவெளியில் தலைக்காட்டி இருக்கிறார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்துள்ளது.

ஆர்யன்கான் சார்பில் 2 முறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோதும், அந்த மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில், மும்பை மத்திய சிறையிலிருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் வந்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டதட்ட 20 நிமிடங்கள் ஷாருக்கான், ஆர்யன் கான் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யன் கானுக்கு இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.