உயர் நீதிமன்ற நிபந்தனை : போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜரானார் ஆர்யன் கான்
மும்பை உயர் நீதிமன்ற நிபந்தனையின்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆரியன் கான் ஆஜரானார்.
கடந்த அக்டோபர் 3ம் தேதி மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, மும்பை கீழமை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் 29ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு 14 நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
ஓவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் காலை 11- 02 மணிக்குள் ஆரியன் கான் ஆஜராகி கையெழுதிட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இன்று மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜரானார்.
14 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஆரியன் கான் மீறி நடந்தால், அவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி போதைப் பொருள் தடுப்பு பிரிவு முறையிடலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.