ஆர்யன் கானுக்கு 'ஜாமீன்' கிடைக்குமா ? - தொடரும் விசாரணை
போதை பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் தொடுத்த 'ஜாமீன்' மனு மீதான விசாரணை இன்றும் தொடருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது நண்பர்கள் போதை பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஆர்யன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்திருந்தது. ஆர்யன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், ''ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. அவரிடமிருந்து போதை பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றார். இதனையடுத்து, விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில், இன்று இந்த விசாரணை தொடர உள்ளது.