ஆர்யன் கானை அந்த இடத்திற்கு அனுப்பி வையுங்க - அட்வைஸ் கொடுத்த மத்திய அமைச்சர்
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே ஆலோசனை கொடுத்துள்ளார்.
மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதைஎதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது -
போதைப்பொருள் வழக்கில் நீதிமன்றம் ஆதாரத்தை கண்டுபிடித்ததால், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. தற்போதைய சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும். மறுவாழ்வுக்கு (போதைப்பொருள் நுகர்வோர்) தயாராக இருந்தால் கைதுகளை தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். ஷாருக்கான் தனது மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு அனுப்ப வேண்டும். ஆர்யன் கான் ஒரு மாதத்தில் மறுவாழ்வு பெறுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.