போதைப்பொருள் விவகாரம் - ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
ஆர்யன் கான் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான், உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து, ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நேற்று சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், ஆர்யன் கான் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது, இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 26ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருக்கிறது.