சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்து : போலீஸ் விசாரணையில் வசமாக சிக்கிய ஷாருக்கான் மகன்

cinema-sharukkan-son-drug-police-investigation
By Nandhini Oct 03, 2021 07:10 AM GMT
Report

சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்து தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கப்பலில் போதை விருந்து நடைபெற்றதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியமாக தகவல் சென்றது.

இதனையடுத்து, நடிகர்கள், நடிகர்களின் மகன்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும், பார்ட்டியில் அனைவரும் ஹசிஷ், எம்டி, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இதன் பிறகு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினார்கள்.

அப்போது, விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 8 பேரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்து : போலீஸ் விசாரணையில் வசமாக சிக்கிய ஷாருக்கான் மகன் | Cinema Sharukkan Son Drug Police Investigation

சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்து : போலீஸ் விசாரணையில் வசமாக சிக்கிய ஷாருக்கான் மகன் | Cinema Sharukkan Son Drug Police Investigation