இன்ஸ்டாவில் புரொஃபைலை நீக்கிய ஆர்யன் கான் - ரசிகர்கள் ஷாக்

cinema-sharukhan-son
By Nandhini Nov 01, 2021 06:47 AM GMT
Report

சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கி உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன், 23 வயதான ஆர்யன் கான், இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார். இந்நிலையில், சமூக ஊடக தளத்திலிருந்து தனது புகைப்படத்தை நீக்கியுள்ளார்.

மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருளை பயன்படுத்தியதாக ஆர்யன் கானை, கடந்த அக்டோபர் 3ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, ஆர்தர் ரோடு சிறையில் ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை அன்று ஜாமீனில் விடுதலையானார் ஆர்யன்கான். வீடு திரும்பிய ஆர்யன் கான், வீட்டுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்து, ரசிகர்கள் வரவேற்றனர். இந்நிலையில், ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராமில் படத்தை நீக்கியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர்.

இன்ஸ்டாவில் புரொஃபைலை நீக்கிய ஆர்யன் கான் - ரசிகர்கள் ஷாக் | Cinema Sharukhan Son