பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ
ரசிகரின் பாதிக்கப்பட்ட மகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பெங்களூரில் இருக்கும் ரஜினி ரசிகரின் மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அந்த சிறுமியிடம் காணொளி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறி இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ -
#Rajinikanth pic.twitter.com/YncRvoGWtN
— Senthilraja R (@SenthilraajaR) December 17, 2021
சூப்பர் ஸ்டாரின் இந்த ஆறுதலை எதிர்பார்க்காத ரசிகர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்.
ரசிகர்களும் தலைவர் வேற லெவல் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.