‘தலைவா... நீங்க வேற லெவல்’ - சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன சச்சின்

cinema-samugam-sachin-rajini-wishes
By Nandhini Oct 26, 2021 10:16 AM GMT
Report

இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று வழங்கப்பட்டது. 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் வாழ்நாள் சாதனைக்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிகாந்துக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற பின் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "விருது வழங்கிய மத்திய அரசுக்கும், பாலச்சந்தருக்கும், தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்தை தலைவா என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த டுவிட்டர் பதிவில், "ஒவ்வொரு முறையும் தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்புகளையும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பையும் உருவாக்கக்கூடிய நடிகர்கள் இந்தியாவில் மிகக் குறைவு. அந்த அதிர்வலைகளை தலைவன் ரஜினி ஒவ்வொரு முறையும் செய்கிறார். தனது அசாத்தியமான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாஹேப் பால்கே விருதுபெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.