‘சூர்யா இங்கு வந்தால் அவருக்கு சாணிப்பால் அபிஷேகம் செய்யப்படும்...’ - எச்சரிக்கை விடுத்த பாமக
‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் வன்னிய சமூகத்தினரை அவமதித்ததாக பாமகவினரும், வன்னியர் சமூகத்தினரும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
பிரச்சினை வலுத்துக் கொண்டிருந்ததால், ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பாமகவினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு நீடித்து வருகிறது. சூர்யா எங்கே சென்றாலும் அவருடன் 2 போலீசார் உடன் செல்கிறார்கள்.
இந்த பிரச்சனையெல்லாம் ஓயும் வரை கொஞ்சம் அமைதியாக இருக்கலாம் என்று நினைத்த சூர்யா, குடும்பத்தினருடன் துபாய் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடந்த இப்போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து ஸ்டாலின் பேசியதாவது -
வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முடியாது. முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அடுத்த மாதம் 23ம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வன்னியர் வாழும் கிராமங்களில் ஆண்களையும், பெண்களையும் இளைஞர்களையும் திரட்டி அக்னிகுண்டத்தில் சூர்யாவின் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்துவோம். அப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு அக்னிகுண்டம் பொறித்த அரை பவுன் காசு டாலர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சூர்யாவை உதைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று கூறி வந்த நிலையில், சூர்யாவுக்கு எதிராக போராடினாலே பரிசு என்று அறிவித்துள்ளத தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.