என் குரு சிவசங்கர் பாபா ரொம்ப நல்லவர்... பெண்கள் மீது நாட்டம் இல்லாதவர் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி!

cinema-samugam
By Nandhini Jun 15, 2021 09:34 AM GMT
Report

சிவசங்கர் பாபாவுக்கு ரொம்ப நல்லவர் என்றும் அவர் பெண்கள் மீது நாட்டமில்லாதவர் என்றும் பிரபல நடிகர் சண்முகராஜன் பரபரப்பு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா. இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர், சம்மன் அளிக்கப்பட்டது. அதில் அவருக்கு நெஞ்சுவலி என்று டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் டேராடூன் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ‘விருமாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் சண்முகராஜன் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

என் குரு சிவசங்கர் பாபா ரொம்ப நல்லவர்... பெண்கள் மீது நாட்டம் இல்லாதவர் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி! | Cinema Samugam

அந்த பேட்டியில், எனது குரு சிவசங்கர் பாபா. நான் அவருடன் 4 வருடங்கள் சீடராக இருந்துள்ளேன். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்துள்ளதாக கூறுவது ஒரு துளி கூட உண்மை இல்லை. இது முற்றிலும் பொய்யானது. புகார் அளித்த முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் என்ற இருவருக்கும் பள்ளி மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடு தான் இது.

பாபாவுக்கு பெண்கள் மீது எந்தவிதமான நாட்டம் கிடையாது. அவர் பல பெண்களை படிக்க வைத்து வருகிறார். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர் அவர். அவரை, காமக் கொடூரன் போல சித்தரித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தால் சீடர்கள் நாங்கள் மனஉளைச்சலில் இருக்கிறோம். இரு தரப்பையும் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும். தற்போது நல்லாட்சி நடந்து வருகிறது. இதனால் ஒரு நல்லவர் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்று பேசினார்.