‘ஓ சொல்றீயா.. மாமா..’ சமந்தா பாடல் சர்ச்சையால் சிக்கித் தவிக்கும் படக்குழு - ட்ரெண்டாகும் எதிர்ப்பு குரல்
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் 'புஷ்பா'. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
நாளை இப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை புரமோட் செய்யும் வகையில், இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். அவர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறையாகும். இப்பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி இருக்கிறார்.
இப்பாடல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறது. இப்பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
மேலும், இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது, இப்பாடலில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளால் இப்படத்திற்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், உலக முழுவதும் நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கு எதிராக "BoycottPushpaInKarnataka" என்னும் ஹேஸ் டேக் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அதோடு அதிகளவில் டிக்கெட்டும் புக் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.