ஒ.. சொல்றியா மாமா.. ஒ.. ஓ.. சொல்றியா மாமாவின் male version - இணையத்தில் தெறிக்க விடும் லைக்குகள்

cinema-samantha-songs
By Nandhini Dec 24, 2021 07:18 AM GMT
Report

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் male version பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இப்படம் வெளியான ஒரே நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ளார்.

‘ஒ... சொல்றியா மாமா.. ஓ...ஓ... சொல்றியா மாமா...’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இப்பாடலுக்கு ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், இப்பாடலின் ஆண்களை தவறான எண்ணம் கொண்டவர்கள் போல கூறப்பட்டு இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், ஆந்திராவைச் சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு இப்பாடலை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளித்திருந்தது.

இப்பாடலுக்கு எதிராக ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல தமிழகத்திலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், தற்போது ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் male version தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இப்பாடல் யூடுயூபில் வெளியான 5 நாட்களில் 6 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் குவித்து வருகிறது. இந்த பாடலை பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ‘Omg, இது செமையா இருக்கிறது. ‘Oo Antava Oo Oo Antava...’ பாடல் அனைத்து மொழிகளிலும் வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். 

 



இந்த பாடலின் தமிழ் வரிகள் பின் வருமாறு -


புல்லட் வண்டில வந்தா சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க

ஏசி கார்ல இன்னோருத்தன் வந்தா பைக்குக்கு பாய் சொல்றீங்க

வண்டி இல்ல, காரு இல்ல Chanceக்காக காத்திட்டு இருக்கீங்க

உண்மையா சத்தியமா

சொல்றேன் உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி


ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,


சிக்ஸ் சிக்ஸு Pack இருந்தா Sexy-யா இருக்குன்னு சொல்றீங்க

டப்போடு ஒருத்தன் தொப்பையோட வந்த Pack-னா என்னனு கேக்குறீங்க

பேக்கும் இல்ல தொப்பையும் இல்ல உங்க டார்கட் டப்புங்க

அழகா இருந்து என்ன பிரயோஜனம் உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி.


ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,


ஷாப்பிங் கீப்பிங் கூட்டிட்டு போய் சர்வ நாசம் பண்றீங்க

சினிமா கினிமான்னு கூட்டிட்டு போய் வச்சி செஞ்சி விட்டுறீங்க

Atm Paytm தவற வேற ஒன்னும் இல்லைங்க

Moneyஅ மட்டும் பாத்துட்டு மனச பாக்க மாற்றீங்க

உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி


ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,


உன் கூட தான் என் வாழ்கைனு வாய் கிழிய சொல்றீங்க

என் மனசு உசுரும் நீ தான்னு எங்கள முறுக்கேத்துறீங்க

மனசும் இல்ல உசுரும் இல்ல.

சந்தர்ப்பம் வந்துச்சின்னா உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி


ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா, ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,