எனக்கு சரியான ஜோடி சமந்தா தான்... விவகாரத்துக்குப் பின் பேட்டி ஒன்றில் பட்டென்று சொன்ன நாக சைதன்யா
சமந்தாவை போல் நாக சைதன்யாவும், தனது மார்க்கெட்டை விரிவாக்கி பாலிவுட் வரை சென்றுவிட்டார். அங்கு அமீர்கானுடன் லால் சிங் சட்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
கடந்த 7 வருடங்களுக்கு மேல் உருகி... உருகி... காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில வருடங்களில் பிரிவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்துவிட்டுச் சென்றனர்.
விவாகரத்துக்கு பின்னர் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போது அதிலிருந்து மீண்டு தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கி இருக்கிறார்கள்.
இதுநாள் வரை கோலிவுட் - டோலிவுட்டில் நடித்ததை தொடர்ந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சர்ச்சையான கதாபாத்திரத்தை கூட துணிச்சலோடு தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டார்கள். அதேபோல் நாக சைதன்யாவும், தனது மார்க்கெட்டை விரிவாக்கி பாலிவுட் வரை சென்றுவிட்டார்.
அங்கு அமீர்கானுடன் லால் சிங் சட்டா என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பங்கார்ராஜு என்கிற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான இப்படம், அவரது கெரியரிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக மாறி இருக்கிறது. இப்படத்தில் அவருடன், அவரது தந்தை நாகார்ஜுனாவும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், திரையில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார் என நாக சைதன்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சமந்தா என பதிலளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நாக சைதன்யா.