‘விவாகரத்து என்பது வலி மிகுந்தது... பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்...” - சமந்தாவின் உருக்கமாக பதிவு!
வேதனையில் ரசிகர்கள் ‘விவாகரத்து என்பது வலி மிகுந்தது... பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று நடிகை சமந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைத்தள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றியுள்ளார்.
இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்று தகவல் பரவிய நிலையில், கடந்த 2ம் தேதி “நீண்ட ஆலோசனைக்கு பிறகு நானும், நாக சைதன்யாவும் கலந்து பேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று அதிகாரபூர்வமாக விவாகரத்து குறித்து அறிவித்தார்கள்.
இந்நிலையில், விவாகரத்துக்குப்பிறகு சமந்தா வேறொருவருடன் காதலில் உள்ளதாகவும், குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. ஆனால், நான் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளேன். குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, கருக்கலைப்பு செய்து விட்டேன் என்று போன்ற பல வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். விவாகரத்து என்பது வலி மிகுந்தது. இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.