நாகசைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு இவர்தான் முக்கிய காரணம்? சரியாக கணித்து கூறிய ரசிகர்கள்

cinema-samantha-nagasaithanya
By Nandhini Oct 06, 2021 09:51 AM GMT
Report

இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அமிர்கான். இவர் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

தற்போது அமீர்கான் மற்றும் நாகசைதன்யா இணைந்து இந்தியில் லான்சிங் தத்தா என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இதனால் நாகசைதன்யா அமீர்கானின் அறிவுரைபடி விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டினார்.

இது குறித்து நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், எந்த விஷயத்திலும் தவறு செய்வது ஆண்கள் மீது தான் என்று நான் கூறுவது பாரபட்சமாக பேசுகிறேன் என்று நினைக்கலாம். சமீபத்தில் தென்னிந்திய நடிகர்கள் 10 வருஷமாக காதல் செய்து 4 வருஷம் கல்யாணம் வாழ்க்கை வாழ்ந்து அதன் பிறகு விவாகரத்து செய்கின்றனர்.

தற்போது நாக சைதன்யா சமீபத்தில் விவாகரத்து வக்கீலாக பேசப்படுகின்ற நடிகரை சந்தித்துள்ளார். ஆனால் அவரே பல பெண்களின் வாழ்க்கையை பாழாக்கி இவருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

நான் யாரை கூறுகிறேன் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் அமீர்கானை பற்றி தான் சொல்லுகிறீர்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

நாகசைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு இவர்தான் முக்கிய காரணம்? சரியாக கணித்து கூறிய ரசிகர்கள் | Cinema Samantha Nagasaithanya