5-வது முறையாக ஃபிலிம்பேர் விருதை வென்ற சமந்தா - குவியும் பாராட்டுகள்

cinema- samantha-award
By Nandhini Dec 10, 2021 07:11 AM GMT
Report

நடிகை சமந்தா 5வது முறையாக ஃபிலிம்பேர் விருது வென்றிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தன்னுடைய அழகிய புன்னகை சிரிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிப்பு திறமை கொண்ட நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சமந்தா ஃபிலிம்பேர் விருது வென்றிருக்கிறார்.

நடிகை சமந்தாவிற்கும் கிடைக்கும் 5வது ஃபிலிம்பேர் விருதாகும். தி ஃபேமிலி மேன், சீசன் 2 வெப் சீரிஸில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. பேமிலி மேன் சீரிஸ் மூலமாக வெப் சீரிஸிலும் இந்தியிலும் அறிமுகமானார் சமந்தா. அவருக்கு இந்தியில் அபார வரவேற்பு கிடைத்தது.