'இவர்கள் இருவருமே சரியான மெண்டல்கள்...' - சமந்தா வெளியிட்ட பதிவு - சர்ச்சையில் வெடித்தது

cinema-samantha
By Nandhini Nov 12, 2021 06:45 AM GMT
Report

பல பஞ்சாயத்துகளில் இருக்கும் நடிகை சமந்தா தற்போது எந்த பதிவு போட்டாலும் அது சர்ச்சையாக மாறி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும், அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவும் திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களின் விவாகரத்து செய்தியை கண்டபடி சமூகவலைத்தளங்களில் பலர் எழுதித் தள்ளினர். தன்னைப் பற்றி தவறாக பேசியவர்கள் மீது கேஸ் போடப் போகிறேன் என்று கூறினார்.

விவாகரத்திற்கு பிறகு தினமும் ஏதாவது ஒரு பதிவை கணவரை குத்திக் காட்டும் வகையில் போடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை சமந்தா.

இது ஒருபுற மிருக்க, தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்திருக்கும் RRR படத்தின் புரோமோஷனல் பாடல் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலில் இருவரும் இணைந்து நடனம் ஆடி உள்ளனர். இதைப் பார்த்த சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த இரண்டு நடிகர்களும் மெண்டல்கள் என பதிவிட்டிருக்கிறார். இந்த மாதிரி பதிவிட்டது சமந்தாவுக்கு பலர் கண்டனங்களையும், நெகட்டிவ் விமர்சனங்களை பதிஏற்படுத்தியுள்ளது.