"முதலில் நான் மாற வேண்டும்" - விவகாரத்து செய்திக்கு பின் இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட சமந்தா!

cinema-samantha
By Nandhini Oct 05, 2021 06:20 AM GMT
Report

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகை சமந்தா. இவர் தனக்கென்று ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை சமந்தா, நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்தார். இந்நிலையில், அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் நடிகை சமந்தா அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் அக்கினேனி என்ற தனது கணவர் குடும்பப் பெயரை வைத்திருந்தார்.

ஆனால் தற்போது நாக சைதன்யாவை பிரிவதற்கு முடிவு எடுத்த பிறகு தனது கணவரின் குடும்பப் பெயரை நீக்கி சமந்தா என்று மாற்றியுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் சந்தோஷமான விஷயங்களை மட்டுமே பதிவிட்டு வந்த சமந்தா, தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் "உலகை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நான் திருந்த வேண்டும், அதை என் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

"முதலில் நான் மாற வேண்டும்" - விவகாரத்து செய்திக்கு பின் இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட சமந்தா! | Cinema Samantha