மீண்டும் வில்லன் ரோலில் எஸ்.ஜே சூர்யா - யாருடன் இணையப்போகிறாருன்னு தெரியுமா?
குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்துக் கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்தார். இவரின் நடிப்பு ரசிகர்ளை பெரிதும் கவர்ந்து விட்டது.
இதை தொடர்ந்து இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் நடிகர் விஷாலின் 33-வது திரைப்படத்திற்கு மார்க் அன்டனி என்று பெயரிட்டப்பட்டிருக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது.