ஒரே அழுத்து... மாறிடுச்சு கழுத்து.. ரோஜா சீரியலை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்
வீடுகளில் சீரியல்களின் பங்கு முக்கியமானதாக மாறிவிட்டது. சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போதைய நிலவரப்படி டாப்பில் இருப்பது ரோஜா சீரியல். இரவு 9 மணியிலிருந்து 9.30 மணிவரை ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபு சூர்யன் கதாநாயகனாகவும், ரோஜா கதாபாத்திரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா நல்காரும் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். டிஆர்பில் முன்னிலையில் இருக்கும் ரோஜா சீரியலை நெட்டிசன்கள் தற்போது பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். கடந்த வாரம் ஒளிபரப்பான அந்த எபிசோட்டில், ரோஜா இறந்துவிட்டதாக அனுவையும், சாக்ஷியையும் நம்ப வைக்க அர்ஜுன் சார், செண்பகம், அஷ்வின், பூஜா, போலீஸ் அதிகாரி சந்திரகாந்தா போன்ற கதாபத்திரங்கள் ஒரு திட்டம்தீட்டுகின்றனர்.
அதில், ஏற்கனவே இறந்துபோன பெண்ணின் முகத்தில் ஒரு பொம்மையை வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்த முகம் ரோஜா முகமாகவே மாறி விடுகிறது.
இது என்ன புது கதையா இருக்கு. அவன் அவன் பல கோடி செலவு பண்ணி என்ன என்னமோ பண்றான்... ஒத்த பத்து ரூபாய் முகமூடில முகத்தையே மாத்திடாங்களே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Humans ஆடா நீங்க???? @DrSharmila15 மேடம் ??? pic.twitter.com/dYED0iWLcV
— விஜய் (@adi10vj) January 7, 2022