படையப்பா எழுந்து வா... பாட்ஷாபோல் நடந்து வா... - நடிகர் ரஜினிகாந்த் குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து

cinema-rajinikanth-vairamuthu-twitter-wish
By Nandhini Oct 31, 2021 04:15 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கடந்த 28ம் தேதி அன்று இரவு நடிகர் ரஜினிகாந்த்திற்கு தலைசுற்றல் காரணமாக சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காவிரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் உடலை பரிசோதனை செய்த போது, ரத்தத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து அவர் உடல்நிலை தேறி வருவதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

ரஜினியின் குடும்பத்தினரும் இறைவனின் அருளால் ரஜினி நலமாக இருக்கிறார் என்றும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காவேரி மருத்துவமனை நிறுவனரிடம் ரஜினியின் நலம் கேட்டேன்; நாளுக்கு நாள் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன,உத்தமக் கலைஞனே காற்றாய் மீண்டு வா, கலைவெளியை ஆண்டு வா, படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா, வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.