‘2 நாளில் 100 கோடிக்கு மேல் வசூல்’- இணையத்தைத் தெறிக்க விடும் 'அண்ணாத்த' - இந்திய அளவில் டிரெண்ட்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் 100 கோடி வசூலைத் தாண்டி இந்திய அளவில் டிரெண்ட்டாகி வருகின்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். தீபாவளியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
வெளியான முதலே அண்ணாத்த திரைப்படம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுக்க வெளியான திரையரங்குகளில் முதல் நாள் வசூலில் 70 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 42 கோடி ரூபாயும் வசூல் செய்து, இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அண்ணாத்த திரைப்படத்தின் ஹாஷ்டாக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.