ரஜினி, விஜய் படத்தின் வசூல்களை முறியடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா - அடேங்கப்பா... இத்தனை கோடி வசூலா?
புஷ்பா படம் வெளியாக மூன்று நாட்களில் உலக அளவில் 173 கோடிகளை வசூலில் அள்ளி உள்ளது. இந்த வருடம் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதலிடத்தை இப்படம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த, அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி படங்களின் வசூலை அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் முறியடித்துள்ளது.
2 பாகங்கள் கொண்ட ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம், ‘புஷ்பா தி ரைஸ்’ டிசம்பர் 17ம் தேதி வெளியானது. இப்படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இருந்தாலும், படத்துக்கு கூட்டம் குறையவில்லை. 5 மொழிகளிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.
வெளிநாடுகளிலும் வசூலை அள்ளியுள்ளது. ‘புஷ்பா’ வெளியான முதல் 3 நாட்களில் உலக அளவில் 173 கோடிகளை வசூலித்து இந்த வருடம் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கு மாநிலங்களில் புஷ்பா படத்தின் ஓபனிங்கே அல்லு அர்ஜுன் படங்களில் அதிகபட்சமான ஓபனிங் ஆகும். அதே போல் தமிழ்நாடு, கேரளாவிலும் ‘புஷ்பா படமே’ அல்லு அர்ஜுன் படங்களில் அதிகம் வசூலித்திருக்கும் படமாகும். வடஇந்தியாவில் புஷ்பாவின் இந்திப் பதிப்பு வெளியாகி முதல் 3 தினங்களில் 12 கோடிகளை வசூலித்திருக்கிறது.
அல்லு அர்ஜுனின் படம் தெலுங்கில் வெளியாகும் அதேநாள் இந்தியில் வெளியானது இதுவே முதல்முறை. முதல் படத்திலேயே அசாதாரணமான வசூலை படம் பெற்றிருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெறுகையில் 2வது பாகத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கூடும்.
அதே போல் வசூலும், பாகுபலியிலும் அதேதான் நடந்தது. ‘புஷ்பா’ படத்தின் 2-வது பாகத்தை அடுத்த வருடம் வெளியாக உள்ளது. அப்போது முதல் பாகத்தைத் தாண்டி அது வசூல் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.