அடேங்கப்பா... வெளியான முதல் நாளிலே இவ்வளவு கோடியா? வசூல் சாதனை படைத்த ‘புஷ்பா’
அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் ஒரே நாளில் ரூ.47 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஊடகங்களின் விமர்சனங்கள் ‘சுமார்’ என்று வந்தாலும், ரசிகர்கள் ‘சூப்பர்’ என்று கொண்டாடி வருகிறார்கள்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது ‘புஷ்பா’ திரைப்படம். இந்நிலையில், ‘புஷ்பா’ வெளியான முதல் நாளிலே உலகம் முழுக்க ரூ.47 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்துள்ளது.
இதனை, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தெலுங்கானாவில் மட்டுமே ரூ.11 கோடி ரூபாய்க்கு மேலும், தமிழகத்தில் ரூ. 4 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.