அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் - இறுதிச் சடங்கு புகைப்படங்கள்

cinema-punith-rajkumar
By Nandhini Oct 31, 2021 03:51 AM GMT
Report

புகழ் பெற்ற கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூருவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள பெற்றோர் நினைவிடம் அருகிலேயே புனித் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், "தனிப்பட்ட முறையில் அப்பு குடும்பத்தினருடன் எனக்கு பிணைப்பு இருந்தது. நான் அவரை சிறுவனாக பார்த்திருக்கிறேன். அந்த நாட்களிலிருந்தே எங்களுக்குள் நெருங்கிய உறவு இருந்து வந்தது. எனவே, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்துகிறேன். நிச்சயமாக, நான் உணர்ச்சிவசப்பட்டேன். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு. சிறந்த திறமைசாலியை இழந்துவிட்டோம்" என்று உருக்கமாக பேசினார். 

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் - இறுதிச் சடங்கு புகைப்படங்கள் | Cinema Punith Rajkumar Samugam