“அஜித் சார்... சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியல..” - நெகிழ்ந்த புகழ்

actor ajith pukazh
By Nandhini Jan 02, 2022 08:44 AM GMT
Report

நடிகர் அஜித்துடன் பயணம் செய்யும் வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகர் புகழ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகழ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்...❤️” என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

இதனையடுத்து படத்தின் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தின் Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம். இன்னும் சில நாட்களில் இப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.